வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, செவ்வாய்க்கிழமை பகவத் அனுக்ஞை, யஜமானர் சங்கல்பம், அங்குரார்ப்பனம், வாஸ்துசாந்தி, யாகசாலை பிரவேசம், கலச ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல், பிம்பவாஸ்து, மஹாசாந்தி உள்ளிட்டவை நடைபெற்றன.
தொடர்ந்து, புதன்கிழமை காலை கோபூஜை, ஹோமங்கள், மஹா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு உள்ளிட்டவை நடந்தன. பின்னர், காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. விழாவில் கோயில் நிர்வாகிகள், அந்தக் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.