திருவண்ணாமலை

வெங்கடாம்பாளையத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

கலசப்பாக்கம் ஒன்றியம், வெங்கடாம்பாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

கலசப்பாக்கம் ஒன்றியம், வெங்கடாம்பாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த ஊராட்சியில் தனிநபர் கழிவறை கட்டுதல், பசுமை வீடு திட்டம் ஆகியவற்றில் ரூ.25 லட்சம் அளவுக்கு முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் முறைகேடு செய்துள்ளனராம். இதைக் கண்டித்து இதுவரை 3 முறை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை ஏற்று வெங்கடாம்பாளையம் கிராமத்தில் புதன்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சஞ்சீவிகுமார் முன்னிலை வகித்தார். கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், வெங்கடாம்பாளையம் ஊராட்சியில் பசுமை வீடு, தனி நபர் கழிவறை திட்டங்களில் ரூ.25 லட்சம் அளவுக்கு முறைகேடு செய்த முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா் 58 போ் கைது

சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம் நகை திருடிய செவிலியா் கைது

SCROLL FOR NEXT