திருவண்ணாமலை

ஜமாபந்தி: 63 பேருக்கு நலத் திட்ட உதவி

போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 4-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் 63 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

DIN

போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 4-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் 63 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 4-ஆவது நாளாக ஜமாபந்தி கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சந்தவாசல் பிர்காவைச் சேர்ந்த காளசமுத்திரம், கல்குப்பம், குப்பம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு 345 மனுக்களை அளித்தனர்.
இதில், பட்டா மாற்றம், வீட்டுமனைப் பட்டா, சிறு குறு விவசாயச் சான்று உள்பட 63 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி வழங்கினார்.
வட்டாட்சியர் புவனேஸ்வரி, சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் தேவேந்திரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் குப்புசாமி, தனி வட்டாட்சியர் வேடியப்பன், வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாதன் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT