தண்டராம்பட்டு அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மான் மாமிசம், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் புதன்கிழமை தண்டராம்பட்டை அடுத்த ராதாபுரம் வனப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (27) என்பவர், தனது நிலத்தில் நாட்டுத் துப்பாக்கியால் மானை சுட்டுக் கொன்று, நெகிழிப் (பிளாஸ்டி) பைகளில் மானின் மாமிசத்தை அடைத்து, விற்பனைக்காக தாயாராக வைத்திருந்தார்.
இதையடுத்து, புலனாய்வுத் துறை போலீஸார் ஐயப்பனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, 13 நெகிழிப் பைகளில் இருந்த மானின் மாமிசம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து, சாத்தனூர் வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.