வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் உள்ள குளத்தை திமுக சார்பில் தூர்வாரும் பணியை எம்எல்ஏ எ.வ.வேலு புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் திமுக சார்பில் தூர்வாரப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தெரிவித்தார். இதையொட்டி, வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் உள்ள குளத்தை தூர்வாரும் பணியை திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏவுமான எ.வ.வேலு தொடக்கி வைத்தார்.
திமுக மாவட்டச் செயலர் சிவானந்தம், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி, மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன், ஒன்றியச் செயலர்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், சுரேஷ்கமல், நந்தகோபால், நகரச் செயலர் கோட்டை பாபு உள்ளிட்டோரும் குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.