திருவண்ணாமலை

அண்ணா பிறந்த நாள் விழா சைக்கிள் போட்டி: பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

திருவண்ணாமலையில் சனிக்கிழமை (செப்டம்பர் 9) நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழா சைக்கிள் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

DIN

திருவண்ணாமலையில் சனிக்கிழமை (செப்டம்பர் 9) நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழா சைக்கிள் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ஆம் தேதி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
அதன்படி, இந்த ஆண்டுக்கான சைக்கிள் போட்டிகள் சனிக்கிழமை காலை 7 மணிக்கு திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள அண்ணா நுழைவு வாயில் அருகே தொடங்கி, அடி அண்ணாமலை சீனிவாசா மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடல் வரை நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்ட அளவிலான இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இருந்து உரிய அனுமதிக் கடிதம் பெற்று வர வேண்டும். போட்டிக்கான சைக்கிள்களை போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளே எடுத்து வர வேண்டும்.
13, 15, 17 வயதுக்கு உள்பட்டோருக்கென 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், 13 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டரும், 15, 17 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 20 கிலோ மீட்டரும் போட்டித் தொலைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிப்போருக்கு பரிசு மற்றும் தகுதிச் சான்றுகளும், 4 முதல் 10-ஆவது இடம் வரையில் பிடிப்போருக்கு தகுதிச் சான்று மட்டும் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நல அலுவலரை 04175-233169 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT