திருவண்ணாமலை

மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்

திருவண்ணாமலையை அடுத்த களஸ்தம்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரி, மாற்றுத் திறனாளிகள்

DIN

திருவண்ணாமலையை அடுத்த களஸ்தம்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரி, மாற்றுத் திறனாளிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
களஸ்தம்பாடி ஊராட்சியில் தற்போது தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடமில்லை என்று ஊராட்சிச் செயலர் ஏழுமலை கூறினாராம்.
இதனால் ஆத்திரமடைந்த 72 மாற்றுத் திறனாளிகள் தங்களது தேசிய ஊரக வேலைத் திட்ட அட்டையுடன் திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மங்கலம் போலீஸார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு மாற்றுத் திறனாளிகள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

SCROLL FOR NEXT