திருவண்ணாமலை

முன்னாள் மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது. இந்த முகாம் தொடர்ந்து 20 நாள்கள் நடைபெறுகிறது.

DIN

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது. இந்த முகாம் தொடர்ந்து 20 நாள்கள் நடைபெறுகிறது.
தொடக்க விழாவுக்கு கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.மைதிலி, கல்லூரிச் செயலர் எம்.ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியை கோ.சரோஜினி வரவேற்றார்.
சென்னை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவன துணை மேலாளர் எ.நயீம்கான் சிறப்புரை ஆற்றினார். சுயவிவர குறிப்பு தயார் செய்வது எப்படி, நேர்காணல் முறைகள் உள்ளிட்டவை குறித்து அவர் விளக்கிப் பேசினார். கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறைப் பேராசிரியை ஜி.சுகன்யா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் கல்குவாரிகளால் அனந்தலை மலைக்கு பாதிப்பு: பாமக போராட்ட எச்சரிக்கை

ஜமாத்-ஏ-இஸ்ஸாமிக்கு எப்போதும் நற்சான்று வழங்கியதில்லை: கேரள முதல்வா் பினராயி விஜயன்

கொடி நாள் நிதி: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்

கெலமங்கலம் அருகே குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம்: உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண் உடல் தானம்

SCROLL FOR NEXT