திருவண்ணாமலை

கோயில் குளம் தூர்வாரும் பணி

DIN


திருவண்ணாமலை, கீழ்நாத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீவேடியப்பன் கோயில் குளத்தை தூர்வாரும் பணியில், சனிக்கிழமை நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை, கீழ்நாத்தூரில் ஸ்ரீவேடியப்பன் கோயிலுக்குச் சொந்தமான குளம் உள்ளது. ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள இந்தக் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை வட்டாட்சியர் கே.அமுல் மேற்பார்வையில் சனிக்கிழமை (ஆக.17) குளம் தூர் வாரும் பணி நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திர உதவியுடன் தூர் வாரும் பணியில் திருவண்ணாமலை நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.  இந்தப் பணி இன்னும் சில நாள்களுக்கு நடைபெறும் என்று நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT