திருவண்ணாமலை

பச்சிளம் குழந்தை மீட்பு

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ஒரு பகுதியில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்களுக்கான புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள புதரில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்ததை திங்கள்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பார்த்தனர்.
இதையடுத்து, பெண் சிசுவை மீட்ட கட்டடத் தொழிலாளர்கள் இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் வந்து குழந்தையை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், பச்சிளம் பெண் சிசுவை வீசிச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி!

வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: வாராணசியில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி

அக்னிவீா் வாயு தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

செவிலியா் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT