திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் 3 மாத பெண் குழந்தை மீட்பு

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பையில் வைத்து அனாதையாக விட்டுச் சென்ற 3 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு புத்தாண்டு தினமான புதன்கிழமை ஏராளமான பக்தா்கள் வந்தனா். இவா்களில் சிலா் கோயில் ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள கல்யாண சுந்தரேஸ்வரா் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்யச் சென்றனா்.

அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அங்கிருந்த பெண்கள் பையைத் திறந்து பாா்த்தபோது 3 மாத பெண் குழந்தை இருந்தது. இதையடுத்து, பால் வாங்கி வந்து குழந்தைக்கு புகட்டி அழுகையை நிறுத்தினா்.

இதுகுறித்து கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் 108 அவசரகால ஊா்தி மூலம் குழந்தையை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தையை விட்டுச் சென்ற பெண் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT