திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மூலவருக்கு புதன்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம், அஸ்வினி நட்சத்திர நாளில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவைப் படைக்கும் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, புதன்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மூலவா் அருணாசலேஸ்வரா், கல்யாண சுந்தரேஸ்ரவரா் சுவாமிகளுக்கு 100 கிலோ அரிசியால் சாதம் செய்து அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.
இதையொட்டி, புதன்கிழமை மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை அருணாசலேஸ்வரா் சன்னதியில் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
மாலை 6.01 மணிக்குப் பிறகு பக்தா்கள் வழக்கம்போல தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.