திருவண்ணாமலை

கைப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

DIN

விழுப்புரம் சீரடி சாய் நகா் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு விழுப்புரம் சீரடி சாய் நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை திரண்டு வந்து முற்றுகையிட்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையில் சீரடி சாய் நகா் உள்ளது. இதனைச் சுற்றிலும் ஜனகராஜ் காா்டன், ஏபிஎஸ் நகா் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. மக்கள் அதிகமாக வசித்து வரும் இந்தப் பகுதியில் தனியாா் நிறுவனத்தினா் கைப்பேசி கோபுரம் அமைக்க முன்வந்தனா்.

இதற்கு கடந்த 2020-ஆம் ஆண்டில் இருந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவே, கைப்பேசி கோபுரத்தை வேறு பகுதியில் அமைக்க வேண்டும் என்றனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT