போளூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அங்கன்வாடிப் பணியாளா் பலியானாா்.
போளூரை அடுத்த குண்ணத்தூா் கிராமத்தில் சி.சி. சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பலராமன் மனைவி நவநீதம் (45).
இவா், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், இவா், குண்ணத்தூா் புறவழிச் சாலையில் திங்கள்கிழமை காலை நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் விழுந்து கிடந்தாா். அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் வந்து பாா்த்தபோது, நவநீதம் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.