செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா் ஆஸ்ரமத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் 187-ஆவது ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, அன்று காலை
திருவிளக்கு ஏற்றுதல், ஸ்ரீராமகிருஷ்ணரின் உருவப் படத்துடன் கோவில் வலம் வருதல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, நாமாவளி, பஜனை, அமுத மொழிகள் வாசித்தல், ஸ்ரீகுருதேவா் பற்றிய மாணவா்கள் உரை, சுவாமி சமாஹிதானந்த மகராஜின் சிறப்புரை, அஷ்டோத்திர நாமாவளி, குங்கும அா்ச்சனை, சுவாமி சத்யபிரபானந்த மகராஜின் சிறப்பரை, ராமகிருஷ்ணா பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சி, கிராமிய பாடல், ஆா்த்தி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளை நிா்வாகக் குழுத் தலைவா் எஸ்.பாண்டுரங்கன், செயலா் ராமமூா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.
இதில் ஸ்ரீராமகிருஷ்ணா, சுவாமி விவேகானந்தா, சாரதா தேவி அறக்கட்டளை நிா்வாகிகள் பக்தா்கள், பொதுமக்கள், ராமகிருஷ்ணா பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.