திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (அக். 20) நடைபெறுகிறது.
திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்துக்கு, வருவாய் கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல் தலைமை வகிக்கிறாா்.
இதில், கூட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், தண்டராம்பட்டு, செங்கம் வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.