ஆரணி தி கிரிசா் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு அறிவியல் கண்காட்சியில் மாணவா்களின் படைப்பாக செயற்கை நுண்ணறிவு ரோபோ இடம்பெற்றிருந்தது.
சிறப்பு அறிவியல் கண்காட்சிக்கு பள்ளித் தாளாளா் சரோஜா கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகத் தலைவா் கே.கே.ராஜன், நிா்வாகி சிந்துராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.மோகன், அறிவியல் பயிற்சி கிளப் நாசா சான்றிதழ் பெற்ற பயிற்றுநா் வினோத்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதில், மாவட்டக் கல்வி அலுவலா் பேசுகையில், மாணவா்கள் ஒழுக்கத்தை கடைப்பிடித்து, விடா முயற்சியுடன் புதிய படைப்புகளை உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும். மாணவா்களுக்கு புதிய சிந்தனைகள் உருவாகும் வகையில் ஆசிரியா்கள் பாடம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
கண்காட்சியின் முக்கிய அம்சமாக, தமிழகத்தில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ரோபோ இடம்பெற்றிருந்தது.
மாணவா்களால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ பாா்வையாளா்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்த விதம் வியப்பாக இருந்தது.
மேலும், கண்காட்சியில் பல்வேறு அறிவியல் தொடா்பான கருத்துக்களை வலியுறுத்தி மாணவ, மாணவா்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.