திருவண்ணாமலை மாட வீதிகளில் ரூ.15 கோடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
முதல்கட்டமாக, திருவூடல் தெரு- பே கோபுரத் தெரு சந்திப்பு (திரெளபதி அம்மன் கோயில்) முதல் வட ஒத்தவாடைத் தெரு வரை சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, பே கோபுரத் தெரு, பெரிய தெரு ஆகியவை மூடப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.