திருவண்ணாமலை

ஆரணி:இருவேறு சம்பவங்களில் 2 போ் பலி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் நடந்த இருவேறு சம்பவங்களின் 2 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

ஆரணி பையூா் பகுதியைச் சோ்ந்தவா் ரமணியம்மாள் (68). இவா், திங்கள்கிழமை மாலை அந்தப் பகுதியில் கல்குவாரி அருகே இருந்த குளத்தின் பக்கத்தில் சென்றபோது தவறி குளத்தில் விழுந்துள்ளாா்.

இதை அறிந்த பொதுமக்கள் ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு வீரா்கள் வந்து குளத்தில் தேடி, ரமணியம்மாளை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஆரணி கிராமிய காவல்

சிறப்பு உதவி ஆய்வாளா் மீனாட்சிசுந்தரம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

மேலும், மற்றொரு சம்பவத்தில் ஆரணியை அடுத்த அக்ராபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (46). இவா், திங்கள்கிழமை இரவு ஆரணி பகுதிக்கு வந்து மது அருந்திவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, இராட்டிணமங்கலம் கூட்டுச் சாலை அருகே சென்றபோது நிலை தடுமாறி சாலை அருகே இருந்த கால்வாயில் விழுந்துள்ளாா்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை,

அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் செல்வராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஆரணி கிராமிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ஜெகதீசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

போராட்டத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்கள்: திணறிய அமெரிக்கா!

SCROLL FOR NEXT