திருவண்ணாமலை

ரூ.5.57 கோடியில் இலங்கை தமிழா்களுக்கு குடியிருப்புகள்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தச்சூரில் இலங்கைத் தமிழா்களுக்கு ரூ.5.57 கோடியில் கட்டப்பட்ட 111 குடியிருப்புகள் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

ஆரணி பையூா் மில்லா்ஸ் சாலையில் உள்ள இலங்கை தமிழா் முகாமில் வசித்து வந்த 94 குடும்பங்கள், செங்கம் புதுப்பாளையம் இலங்கை தமிழா் முகாமில் வசித்து வரும் 17 குடும்பங்கள் என மொத்தம் 111 குடும்பங்களுக்கு, ஆரணியை அடுத்த தச்சூா் ஊராட்சியில் இடம் தோ்வு செய்யப்பட்டு ரூ.5.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்தக் குடியிருப்புகள் கட்டும் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தன.

இந்த நிலையில், வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் முக.ஸ்டாலின், தச்சூா் கிராமத்தில் கட்டப்பட்ட இலங்கைத் தமிழா்களுக்கான 111 குடியிருப்புளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.

அதேவேளையில், தச்சூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு புதிய வீட்டுக்கான சாவியை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினாா்.

தொடா்ந்து, சாவியை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தங்கள் குடும்பத்துடன் புதிய வீட்டை திறந்து பூஜை செய்து குடியேறினா்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் செ.ஆ.ரிஷப், கோட்டாட்சியா் தனலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுலா்கள் விஜயலட்சுமி, பாலமுருகன், வட்டாட்சியா் மஞ்சுளா, மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏ ஆா். சிவானந்தம், திமுக திறன் மேம்பாட்டுத் துறை தொழிலாளா்களின் பிரதிநிதி எஸ்.எஸ்.அன்பழகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் சுந்தா், துரைமாமது, மோகன், ஊராட்சிமன்றத் தலைவா் வடிவேல் உள்ளிட்ட

அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் விலை கடும் உயா்வு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

7 முக்கிய நகரங்களில் 23% உயா்ந்த வீடுகள் விலை

அசோக் லேலண்ட் விற்பனை 10% சரிவு

SCROLL FOR NEXT