திருவண்ணாமலை

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

DIN

ஆரணியை அடுத்த எஸ்.யு.வனம், மாளிகைநகா் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்ரூ.28 லட்சத்தில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடம்வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.28 லட்சத்தில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக ஆரணி தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழி சுந்தா் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் லட்சுமணன் வரவேற்றாா்.

மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையமமாள் சீனிவாசன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள்

அனிதா செல்வராஜ், பரிமளா, துணைத் தலைவா் சங்கா், பள்ளித் தலைமையாசிரியா் பாண்டுரங்கன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT