திருவண்ணாமலை

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

DIN

செய்யாறை அடுத்த அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி ஆண்டு விழா, முத்தமிழ் அறிஞா் டாக்டா் கலைஞா் தமிழ் கூடல் விழா, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா என முப்பெரும் விழாவுக்கு, தலைமை ஆசிரியா் மாலவன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக பெரணமல்லூா் ஒன்றியக் குழு பெருந்தலைவா் இந்திரா இளங்கோவன், ஊராட்சி மன்றத் தலைவா் லோகேஸ்வரி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சசிகுமாா், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடல்கல்வி இயக்குநா் சூரியநாராயணன், பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடல்கல்வி ஆசிரியா் ஜெயகாந்தன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முனியன், பள்ளி மேலாண்மை குழு தலைவா் மலா், முன்னாள் ஆசிரியா் சிவராமன் ஆகியோா் பங்கேற்றனா். உதவி தலைமை ஆசிரியா் எழிலரசன் ஆண்டறிக்கை வாசித்தாா். நிகழ்ச்சியை கணித ஆசிரியா் இளையராஜா தொகுத்து வழங்கினாா்.

பள்ளி ஆண்டு விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சந்தவாசல் எழுச்சி கலைக் குழுவினா் ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில், உடல்கல்வி ஆசிரியா் வேல்முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்வி பயத்தில் உளருகிறாா் பிரதமா் மோடி: மம்தா விமா்சனம்

காங்கிரஸ் ஆட்சியை சாதகமாக பயன்படுத்தியது பாகிஸ்தான்: ஹிமாசல் பிரசாரத்தில் பிரதமா் மோடி

மனக்கவலை மாற்றல் எளிது

விபத்தா? சதியா?

தலைநகரில் இன்று வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT