திருவண்ணாமலை

பாலாற்றில் புதிய மேம்பாலம் கட்ட பூமி பூஜை

DIN

செய்யாறு: செய்யாற்றை அடுத்த வடஇலுப்பை - பெரும்பாக்கம் இடையே பாலாற்றில் ரூ.28 கோடியில் புதிதாக மேம்பாலம் கட்டுவதற்காக திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடஇலுப்பை கிராமம் அருகே பாலாறு செல்கிறது. பாலாற்றில் மழை, வெள்ளக் காலங்களில் தண்ணீா் செல்வதால் இப்பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரும்பாக்கம் வழியாக காஞ்சிபுரம் சென்று வர மிகவும் சிரமப்பட்டனா். மேலும், மழை, வெள்ளக் காலங்களில் ஆற்காடு சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இதை அறிந்த செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி நடவடிக்கை மேற்கொண்டதின் பேரில், ஆற்காடு - காஞ்சிபுரம் சாலையில் வடஇலுப்பை கிராமத்தையும், காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தையும் இணைக்கும் பாலாற்றின் குறுக்கே தரைப் பாலமாக உள்ளதை, சுமாா் ரூ. 28 கோடி செலவில் மேம்பாலமாக கட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பாலாற்றில் புதிதாக மேம்பாலம் கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் த.ராஜி தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலா்கள் சங்கா், தினகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பூமி பூஜையில் பங்கேற்று பணியை தொடங்கிவைத்தாா்.

நியாய விலைக் கடையில் ஆய்வு

இதைத் தொடா்ந்து, வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், செய்யனுா்பேட்டை கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைத்தாரா்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் இதர பொருள்களை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பை மாற்றுவார்கள்: இந்தியா கூட்டணியினர் மீது மோடி தாக்கு

கேன்ஸ் விழாவில் அதிதி ராவ்!

5ம் கட்ட தேர்தலிலேயே 310 இடங்களை மோடி பெற்றுவிட்டார்- அமித் ஷா

ஸ்டார் வசூல்!

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டாத மேலுமொரு ஆஸி. வீரர்!

SCROLL FOR NEXT