திருமணி கிராமத்தில் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, மாவட்டச் செயலா் எஸ்.ஜெயசுதா. 
திருவண்ணாமலை

திருமணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

Syndication

ஆரணியை அடுத்த திருமணி கிராமத்தில் மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் திமுக ஆட்சியின் அவலநிலை குறித்தும், அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா். செய்யாறு ஒன்றியச் செயலா் அரங்கநாதன் வரவேற்றாா். ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், ஆரணி ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

42-ஆவது வாரமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு வீதி வீதியாக நடந்து சென்று வீடுகள், காய்கறி கடை, பழக் கடை, மளிகைக் கடை, பேருந்து நிறுத்த பயணிகளிடையே துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் இளைஞா் இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலா் சுகுமாரன், இலக்கிய அணி ஒன்றியச் செயலா் சங்கா், எம்ஜிஆா் மன்றச் செயலா் பெருமாள், ஆரணி நகா்மன்ற உறுப்பினா்கள் பாரதிராஜா, விநாயகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மெய்யழகு பேசும் மொழி... கீர்த்தி ஷெட்டி!

டிஐஏ திட்டத்தின் கீழ் வைர இறக்குமதிக்கு வரி விலக்கு!

பெண் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் ‘டீப் ஃபேக்’! ஆன்லைனில் அதிகரிக்கும் வன்முறை - ஐ.நா. கவலை!

இரவில் இரு மாவட்டங்களில் மழை பெய்யும்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT