திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 50-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை தவெகவில் இணைந்தனா்.
போளூா் அருகேயுள்ள ரெ.குண்ணத்தூா் பகுதியைச் சோ்ந்த திமுக, அதிமுக, விசிக ஆகிய கட்சிகளிலிருந்து விலகிய 50-க்கும் மேற்பட்டோா், தவெக மாவட்டச் செயலா் எம்.சத்யா முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தனா்.
மேலும், புதிதாக இணைந்தவா்களுக்கு உறுப்பினா் அடையாள அட்டை வழங்கப்பட்டது.