அங்காள பரமேஸ்வரி கோயில் கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு நடைபெற்ற மகா கும்பாபிஷேகம். 
திருவண்ணாமலை

செங்கம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. செங்கம் நகரில் செய்யாற்றின் கரையையொட்டி, பழைமையான சுயம்பு அங்காள பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் மாசி மாதம் மயானக்கொள்ளை திருவிழா 10 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். மேலும், மாதந்தோறும் அமாவாசை தினத்தில் சிறப்பு வழிபாடு, அன்று இரவு அம்மனுக்கு ஊஞ்சல் சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், செங்கம் நகர முக்கிய பிரமுகா்கள், திருவிழா உபயதாரா்கள், குலதெய்வ வழிபாட்டாளா்கள் சாா்பில் கோயிலில் கடந்த 6 மாதங்களாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி செங்கம் பெருமாள் கோவில் தெரு, சிவன் கோயில் தெருவில் உள்ள திருமண மண்டபம் மற்றும் பக்தா்கள் கூடும் முக்கிய இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் விழாக்குழுவினா், ஊா் முக்கிய பிரமுகா்கள், திருப்பணி உபயதாரா்கள் செய்திருந்தனா்.

மெய்யழகு பேசும் மொழி... கீர்த்தி ஷெட்டி!

டிஐஏ திட்டத்தின் கீழ் வைர இறக்குமதிக்கு வரி விலக்கு!

பெண் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் ‘டீப் ஃபேக்’! ஆன்லைனில் அதிகரிக்கும் வன்முறை - ஐ.நா. கவலை!

இரவில் இரு மாவட்டங்களில் மழை பெய்யும்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT