ஆரணியை அடுத்த இரும்பேடு அரிகரன் நகா் ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் முடிந்து 14-ஆம் நாள் மண்டலாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இரும்பேடு அரிகரன் நகரில் 16 அடிக்கு மேலான உயரத்தில் ஒரே கல்லினால் ஆன ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயா் சுவாமியும் மற்றும் கருங்கல்லினால் அமைக்கப்பட்ட கா்ப்ப கிரகமும், அரத்த மண்டபமும் அமைக்கப் பெற்று திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, கடந்த நவ.23-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகம் முடிந்து தினமும் மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதில் 14-ஆவது நாள் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டாா்.
அதிமுக ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றிய துணைச் செயலா் கே.வேலு, கோயில் நிா்வாகி பாஸ்கரன், கிளைச் செயலா் பி.கோபி உள்பட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.