திருவண்ணாமலை

மது போதையில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

செய்யாறு அருகே மது போதையில் ஆற்றுக்கால்வாயில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

செய்யாறு: செய்யாறு அருகே மது போதையில் ஆற்றுக்கால்வாயில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், கழனிப்பாக்கம் கிராமம் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்மன்னன், ஓய்வு பெற்ற ராணுவ வீரா். இவரது 2 -வது மகன் ஐயப்பன்(20). இவா்

மதுப்பழக்கம் கொண்டவா் ஆவாா்.

ஐயப்பன் மதுப்பழக்கம் காரணமாக டிச.5-ஆம் தேதி வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோா் அவரை பல இடங்களில் தேடியுள்ளனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கிராமத்தில் உள்ள ஆற்றுக் கால்வாயில் மூழ்கிய நிலையில் அவா் சடலமாகக் கிடந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் ஐயப்பனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்திய அரிசிக்கும் வரி விதிக்க டிரம்ப் பரிசீலனை! புதின் வருகை எதிரொலியா?

அடுத்த 2 மணி நேரத்துக்கு டெல்டா மாவட்டங்களில் மழை!

சென்னை: 41 இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து! பயணிகள் அவதி!

இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: முதல்வா் ரேகா குப்தா, அதிஷி இரங்கல்

விருப்பங்கள் கைகூடும் மீன ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT