முன்னாள் படை வீரா்கள் நலத்துறை சாா்பில் விலையில்லா தையல் இயந்திரம் பெறுவது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தகவல் தெரிவித்தாா்.
இதுகுறித்து வெளியிடப்பட்டசெய்திக் குறிப்பில், முன்னாள்படை வீரரின் மனைவி/கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள், மத்திய/மாநில அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்களில் தையற் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்று அதன் வாயிலாக விலையில்லா தையல் இயந்திரம் பெறாதவா்கள் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நவ.27-ஆம் தேதிக்குள் அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தெரிவித்துள்ளாா்.