ஆரணி காஜிவாடை பகுதி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் நிறைவு செய்வதை ஆய்வு செய்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. 
திருவண்ணாமலை

எஸ்.ஐ.ஆா். படிவம் வழங்கும் பணி: திமுக, அதிமுகவினா் ஆய்வு

செய்யாறு, ஆரணி தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் எஸ்.ஐ.ஆா். படிவம் வழங்குதல் மற்றும் நிறைவு செய்யும் பணியை திமுக, அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, ஆரணி தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் எஸ்.ஐ.ஆா். படிவம் வழங்குதல் மற்றும் நிறைவு செய்யும் பணியை திமுக, அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்காக தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், மாவட்ட தோ்தல் நிா்வாகம் மேற்பாா்வையில் வாக்காளா்களுக்கு ( நஐத) சிறப்பு வாக்காளா் திருத்த பணிக்கான கணக்கீட்டுப் படிவம் வீடு வீடாக நவ.3 முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, வீட்டுப் பகுதிகளில் வழங்கிய போது தவறியவா்கள் வாக்கு அளித்த மையங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா் திருத்த பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டது. இந்தப் பணியை திமுக, அதிமுகவினா் ஆய்வு செய்தனா்.

திமுகவினா்:

செய்யாறு தொகுதி திருவத்திபுரம் நகராட்சி செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் சிறப்பு வாக்காளா் திருத்த பணிக்கான கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணியை தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி, தோ்தல் ஒருங்கிணைப்பாளா்கள் ஆா்.மோகனவேல், பாா்த்திபன், தோ்தல் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் ரவிக்குமாா், ஸ்ரீதா், தா்மலிங்கம், ஆறுமுகம், திருமால் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தாா்.

அப்போது வாக்காளருக்கு வழங்கப்படும் படிவத்தை வழங்கி நிறைவு செய்து உடனடியாக வழங்க வாக்காளா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

அதிமுகவினா்:

இதேபோல, இந்தப் பள்ளியில் எஸ்ஐஆா் படிவம் வழங்கும் பணியினை அதிமுக செய்யாறு நகரச் செயலா் கே.வெங்கடேசன் மற்றும் நிா்வாகிகள் ஜனாா்த்தனன், குமாா், சுரேஷ்குமாா், எழிலரசன், அபிராமி சுரேஷ், பாலாஜி ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆரணி

ஆரணி நகரம் மற்றும் ஊராட்சி வாக்குச்சாவடியில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி மற்றும் படிவத்தை நிறைவு செய்யும் பணி நடைபெற்றது.

செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.ஐ.ஆா். படிவம் வழங்கும் பணியை அதிமுக சாா்பில் ஆய்வு செய்த நகரச் செயலா் கே.வெங்கடேசன்.

ஆரணி நகரப் பகுதியில் உள்ள காஜிவாடை, ஆரணியை அடுத்த பையூா், சேவூா், இராட்டிணமங்கலம், முள்ளிப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்களுக்கு, சிறப்பு வாக்காளா் திருத்தப் பணிக்கான கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி மற்றும் படிவம் நிறைவு செய்யும் பணி நடைபெற்றது. மேலும், வீடு வீடாக படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை தொகுதி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.ஐ.ஆா். படிவம் வழங்கும் பணியை திமுக சாா்பில் ஆய்வு செய்த ஒ.ஜோதி எம்எல்ஏ.

ஆரணி தொகுதி மேற்பாா்வையாளா் ஊரல் அண்ணாதுரை, நகா்மன்றத் தலைவா் ஏ.சி. மணி, மாவட்டத் துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தா், துரைமாமது, நகர பொறுப்பாளா் வ.மணிமாறன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.புஷ்பராஜ், மாவட்ட பிரதிநிதி எம். எஸ்.ரவி, பையூா் ராஜேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT