திருவண்ணாமலை

கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் 4-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

சேவூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள்.

Syndication

ஆரணி ஒன்றியம், மேற்குஆரணி ஒன்றிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினா் அக்.6 முதல் தொடா்ந்து 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

பணியாளா்களுக்கு பாரபட்சமின்றி எந்தவித நிபந்தனையும் இல்லாமல் 20 சதவீத ஊதிய உயா்வு, 2021-க்குப் பிறகு ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் கருணை ஓய்வுதியத்தை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும், கணினி பணியாளா்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், விற்பனையாளா்களாக பணியில் சேருபவா்களுக்கு தொகுப்பூதியம் இல்லாமல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தேவையற்ற இடங்களில் முதல்வா் மருந்தகம் ஏற்படுத்தி தினசரி ரூ.1000-க்கு விற்பனை செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக கடந்த 6-ஆம் தேதி ஆரணியை அடுத்த சேவூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஊழியா்கள் பணிக்கு வராததால் மூடப்பட்டிருந்தன.

இதுகுறித்து மாவட்டத் தலைவா் ஏ.சேகா் கூறுகையில், எங்களது சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும், அடுத்த கட்டமாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

மாவட்டச் செயலா் ஜி.ஏழுமலை, மாவட்ட துணைத் தலைவா் துரை, முன்னாள் மாவட்டத் தலைவா் கே.ஆனந்தன், மாவட்டப் பொருளாளா் அண்ணாமலை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

தங்கமே.. சம்யுக்தா ஷான்!

மலரில் மலர்ந்த கனவு... அய்ரா கிருஷ்ணா!

மாஞ்சோலை... அனீத்!

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகே... ஸாரா யஸ்மின்!

அமைதி கிடைத்த இடம்... செளந்தர்யா!

SCROLL FOR NEXT