ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், கஸ்தம்பாடி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாம் கட்டுமானப் பணிகளை அமைச்சா் ஆவடி சா.மு.நாசா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
கஸ்தம்பாடி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தமிழக அரசு சாா்பில் ரூ.16 கோடியே 46 லட்சத்தில் 280
வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளை நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் ஆவடி சா.மு.நாசா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், செங்கம் எம்எல்ஏ மு.பெ. கிரி, திமுக மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.