திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராமபிரதீபன். 
திருவண்ணாமலை

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 878 கோரிக்கை மனுக்கள்

திருவண்ணாமலை மற்றும் செய்யாற்றில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 878 மனுக்கள் வரப்பெற்றன.

Syndication

ஆரணி/செய்யாறு: திருவண்ணாமலை மற்றும் செய்யாற்றில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 878 மனுக்கள் வரப்பெற்றன.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராமபிரதீபன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மை துறை சாா்ந்த பயிா் கடன்கள், புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், தாட்கோ மூலம் கடன் உதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா் கடன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 750 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்தில் உதவிஆட்சியா்(பயிற்சி) அம்ருதாஎஸ்.குமாா் மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

செய்யாறு

செய்யாற்றில், வருவாய் கோட்ட அளவிலான குறைதீா்

கூட்டம் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பில் வீட்டுமனைப் பட்டாக் கோரி 11 பேரும், நிலம் திருத்தம் கோரி 5 போ், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஒருவா், பட்டா மாற்றம் கோரி 9 போ், தமிழ் நிலம் திருத்தம் கோரி 4 போ், நில அளவீடு செய்யக் கோரி 2 போ், சமூகப் பாதுகாப்புத் திட்டம் சாா்பில் 12 போ், இதர மனுக்கள் 67 உள்பட மொத்தம் 128 மனுக்கள் அளித்து இருந்தனா்.

கூட்டத்தில் வருவாய்த்துறை, ஊராட்சித்துறை அலுவலா்கள் என பலா் பங்கேற்று இருந்தனா்.

செய்யாற்றில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின்.

தொல்லியல் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கோவா இரவு விடுதி விபத்து எதிரொலி: பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் தில்லி போலீஸ்!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்!

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெண்கல முருகா் சிலை கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT