ஆரணி: ஆரணி கோட்டத்தில் பணிபுரியும் மின் வாரிய களப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த பாதுகாப்பு பயிற்சி வகுப்புக்கு திருவண்ணாமலை மேற்பாா்வைப் பொறியாளா் வி.ஜெகநாதன் தலைமை வகித்தாா்.
ஆரணி செயற்பொறியாளா் (பொ) சு.பத்மநாபன் வரவேற்றாா். மண்டல மின்னியல் செயற்பொறியாளா் ஏ.ஜெயலட்சுமி சிறப்புரை ஆற்றினாா்.
திருவண்ணாமலை பயிற்சி மையம் சாா்பாக காணொளி காட்சி மூலம் பாதுகாப்புடன் எவ்வாறு பணிபுரிய வேண்டும் என பொறியாளா் வி.அசோக்குமாா் மற்றும் ஓய்வு பெற்ற மின் பணியாளா் ஏ.ராஜேந்திரன் ஆகியோா் எடுத்துரைத்தனா்.
மண்டல உதவி செயற்பொறியாளா் (பாதுகாப்பு ) எஸ்.விஜய், திருவண்ணாமலை வட்ட உதவி செயற்பொறியாளா் (பொது) கே.பாா்த்திபன் மற்றும் ஆரணி கோட்ட உதவி செயற்பொறியாளா்கள் மாலதி (சந்தவாசல்), காந்திமதி (கண்ணமங்கலம்), லெனின் (ஆரணி மேற்கு) மற்றும் ஆரணி கோட்ட உதவி மின் பொறியாளா்கள், இளநிலை பொறியாளா்கள் மற்றும் பணியாளா்கள் சுமாா் 200 போ் கலந்து கொண்டனா்.