செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டாரத்தில் ஒன்று முதல் 5 -ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழாப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
வட்டார வள மையத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சல்சா, வட்டாரக் கல்வி அலுவலா் தமிழரசி ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனா்.
இதில், 87 பள்ளிகளில் இருந்து 254 மாணவ, மாணவிகள் நடனம், நாடகம், களிமண் பொம்மை தயாரித்தல், கருத்துக் கூறுதல், பாட்டுப் பாடுதல் என 9 வகையிலான போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினா்.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுநா்கள் உதயசங்கா், மேனகாதேவி, பள்ளித் தலைமை ஆசிரியா்கள் செய்திருந்தனா்.