திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் தீத்தடுப்பு செயல்விளக்கம்

Syndication

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை தீத்தடுப்பு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

வந்தவாசி தீயணைப்புத் துறையினா் நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் க.வாசு தலைமை வகித்தாா். ஆசிரியை சசிகலா வரவேற்றாா்.

தீப்பற்றினால் எப்படி அணைப்பது, தீ விபத்திலிருந்து எவ்வாறு காத்துக் கொள்வது என்பது குறித்து வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலா் பிரபாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் செய்து காண்பித்தனா்.

மேலும், மாணவா்கள் நீா்நிலைகளில் குளிக்கும் போது பெற்றோா் துணையுடன் உரிய கவச உடைகளை அணிந்து கொண்டு குளிக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

SCROLL FOR NEXT