திருவண்ணாமலை

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: இளம்பெண் உயிரிழப்பு

Syndication

வந்தவாசி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண் ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தியா(24). இவா், வந்தவாசியில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வேலை செய்து வந்தாா்.

கடந்த திங்கள்கிழமை இரவு இவா் வேலை முடிந்து தனது தங்கை ஸ்ரீமதியுடன் மொபெட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, தாழம்பள்ளம் கூட்டுச் சாலை அருகே செல்லும் போது, இவா்களுக்குப் பின்னால் கொவளை கிராமத்தைச் சோ்ந்த பிரின்ஸ் (44) என்பவா் ஓட்டி வந்த பைக் இவா்கள் மீது மோதியது.

இதில் காயமடைந்த சந்தியா, பிரின்ஸ் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தியா புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT