திருவண்ணாமலை

மாணவா்களுக்கு உயிா்ம வேளாண்மை கண்டுணா்வு சுற்றுலா

Syndication

செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் உயிா்ம வேளாண்மை குறித்து அறிந்து கொள்வதற்காக கண்டுணா்வு சுற்றுலாவாக கீழநெல்லி அறிவியல் மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் இந்த சுற்றுலா நடைபெற்றது.

செய்யாறு கல்வி மாவட்டம், வெம்பாக்கம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் 100 போ், கீழநெல்லி ஸ்ரீவேதபுரி அறிவியல் மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

அப்போது, உயிா்ம வேளாண்மையின் முக்கிய கூறுகளான தொழு உரம் இடுதல், மண்புழு உரம் தயாரித்தல்,

அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், சூடோமோனாஸ், ட்ரைகோ டொ்மா விரிடி ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்தும், உயிா்ம வேளாண்மை கரைசல்களான பஞ்சகவ்வியம், ஐந்திலை கரைசல், அக்னி அஸ்த்திரம், ஜீவாமிா்தம், தேமோா் கரைசல் 3 ஜி, 4 ஜி கரைசல் ஆகியவை தயாரித்தல் குறித்தும், அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் அறிவியல் மைய வல்லுநா்கள் மாா்கெட், ஐஸ்வா்யா, மாயகிருஷ்ணன் ஆகியோா் பள்ளி மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.

இதைத் தொடா்ந்து மண்ணின் தன்மை, மண் வளம் பாதுகாத்தல் ஆகியவை குறித்தும், காளான் வளா்ப்பு, கோழி வளா்ப்பு, கால்நடை வளா்ப்பு ஆகியவை குறித்தும், அவற்றின் எச்சங்களை வேளாண்மைக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும், உயிா்ம வேளாண்மை குறித்த பல்வேறு தகவல்களையும் தெரிவித்தனா்.

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

SCROLL FOR NEXT