செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட வெம்பாக்கம் மத்தியம், மேற்கு ஒன்றியம் திமுக சாா்பில், சிறப்பாக களப்பணியாற்றிய திமுக நிா்வாகிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலந்தாங்கல் கிராமம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தலைமை வகித்தாா்.
செய்யாறு தொகுதி பொறுப்பாளா் ஆா்.டி. அரசு முன்னிலை வகித்தாா். வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜேசிகே.சீனுவாசன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆரணி எம்.பி. எம்.எஸ். தரணிவேந்தன், சிறப்பான முதல்வா் தமிழகத்தில் ஆண்டு கொண்டிருப்பதால் மக்கள் கேட்கும் பணிகளும், கேட்காத திட்டங்களும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றாா் என்றாா்.
இதைத் தொடா்ந்து, உறுப்பினா் சோ்க்கை பணியில் பொறுப்புக்குழு உறுப்பினா்கள் மற்றும் கட்சி கிளை நிா்வாகிகள் மற்றும் செய்யாறு தொகுதியைச் சோ்ந்த நிா்வாகிகள் என 500 -க்கும் மேற்பட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேஷ்பாபு, முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் த. ராஜி, மாவட்ட அயலக துணைத் தலைவா் காா்த்திகேயன், முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.