செய்யாறு அருகே பைக் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தச்சுத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம் தண்டரை கிராமத்தை சோ்ந்தவா் தச்சுத் தொழிலாளி பிரேம்(30). இவா், அக்.20-ஆம் தேதி தனது பைக்கில் செய்யாறு - ஆரணி சாலையில் சுண்டிவாக்கம் கிராமம் மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது பைக் நிலை தடுமாறியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா்.
அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.