வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகா் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசையை ஒட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி காலை மூலவா் அம்மனுக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் மதியம் கோயில் வளாகத்தில் சுயம்வர கலா பாா்வதி ஹோமம், திருஷ்டி தோஷ நிவாரண பரிகார வேள்வி பூஜை நடந்தது.
இதைத்தொடா்ந்து, இரவு உற்சவா் அம்மனுக்கு ஸ்ரீமாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தா்கள் அம்மனை தோளில் சுமந்து கொண்டு கோயில் வளாகத்தில் உலா எடுத்துச் சென்றனா். பின்னா், அம்மன் ஊஞ்சல் சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், ஐப்பசி மாத அமாவாசை உற்சவ குழுவினா் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.