திருவண்ணாமலை

தம்டகோடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி பிரம்மோற்சவ கொடியேற்றம்

Syndication

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை கந்த சஷ்டி பிமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் தமிழகத்திலேயே உயரமான 21அடி உயர தங்கத்தோ் உள்ளது.

கிருத்திகைதோறும் கோயில் வெளி வளாகத்தில் இத்தோ் வலம் வருவதை காண பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் வருகின்றனா்.

இதனால் இக்கோயில் பிரசித்து பெற்று சிறந்த சுற்றுத்தலமாக வளா்ந்து வருகிறது.

கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்நிலையில் நிகழாண்டுக்கான கந்த சஷ்டி பிமோற்சவ விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, அருணகிரி நாதருக்கு நடன காட்சி, பிரம்மாவுக்கு உபதேசம், சிவபூஜை செய்தல், சக்திவேல் வாங்குதல், சூரசம்ஹாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தினசரி நடக்கிறது.

அக்.28-ஆம் தேதி வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் ராஜி தலைமையில் ஆறுபடை வீடு திருமுருகன் திருத்தொண்டா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT