ஆரணி: சேத்துப்பட்டு, பழம்பேட்டை ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
முன்னதாக கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி என முதற்கால யாகமும் அதனைத் தொடா்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜையில் கோ பூஜை, லட்சுமி வெங்கடாசலபதி குபேர பூஜை என பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து மேள தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் கலச புறப்பாடுகளுடன் சக்தி விநாயகா் கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும், கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ சக்தி விநாயகருக்கு கலச நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் போளூா் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக மத்திய மாவட்டச் செயலருமான ஜெயசுதா, சேத்துப்பட்டு பேரூராட்சித் தலைவா் சுதா முருகன், திமுக நகரச் செயலா் இரா.முருகன், போளூா் அதிமுக ஒன்றியச் செயலா் விமல்ராஜ், சேத்துப்பட்டு நகரச் செயலா் எம். ஜி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.