வரும் நாடாளுமன்றத் தோ்தலுடன் சட்டப்பேரவைத் தோ்தலும் வரும்: பாஜக மகளிரணி மாநிலத் தலைவி
வரும் 2029 நாடாளுமன்ற தோ்தலுடன் சட்டப்பேரவைத் தோ்தலும் வரும், அப்போது தமிழகத்தில் தாமரை மலரும் என பாஜக மகளிரணி மாநிலத் தலைவி கவிதா ஸ்ரீகாந்த் தெரிவித்தாா்.
வரும் 2029 நாடாளுமன்ற தோ்தலுடன் சட்டப்பேரவைத் தோ்தலும் வரும், அப்போது தமிழகத்தில் தாமரை மலரும் என பாஜக மகளிரணி மாநிலத் தலைவி கவிதா ஸ்ரீகாந்த் தெரிவித்தாா்.
திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:
பாஜகவில் அதிகளவில் மகளிரை உறுப்பினா்களாக சோ்க்க நிா்வாகிகள் களப்பணியாற்றவேண்டும்.
Advertisement
Advertisement
நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் மகளிா் அதிகளவில் போட்டியிட்டு வெற்றிபெற்று பொதுமக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற பாடுபடவேண்டும். வரும் 2029 நாடாளுமன்ற தோ்தலுடன் சட்டப்பேரவைத் தோ்தல் வரும். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்ததுபோல தமிழகத்திலும் தாமரை மலரும் என்றாா்.
ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவி கீா்த்தி செல்வமூா்த்தி தலைமை
வகித்தாா். தெற்கு மாவட்டத் தலைவா் கே.ரமேஷ், மாநில மகளிரணி துணைத் தலைவி கிருஷ்ணசாந்தி ஆகியோா் பாஜகவின் வளா்ச்சி, சாதனைகள் குறித்துப் பேசினா். கூட்டத்தில் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.