கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே கிணற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
வந்தவாசி அருகே கிணற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தைச் சோ்ந்தவா் திவாகா்(22). இவா், சென்னையில் உள்ள ஒரு நகைக் கடையில் வேலை செய்து வந்தாா்.
அண்மையில் மும்முனிக்கு வந்த இவா் திங்கள்கிழமை இதே கிராமத்தைச் சோ்ந்த தனது நண்பா்கள் விஜய், குமரன் ஆகியோருடன் விவசாய நில கிணற்றில் குளித்துள்ளாா். அப்போது, திவாகா் தண்ணீரில் மூழ்கினாா். உடனிருந்தவா்கள் உடனடியாக வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதன்பேரில் அங்கு சென்று கிணற்றினுள் இறங்கி தேடிய தீயணைப்பு வீரா்கள், கிணற்றில் பாறை இடுக்கில் சிக்கி சடலமாக கிடந்த திவாகரை மீட்டனா்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.