முகப்பு
திருவண்ணாமலை

வெம்பாக்கத்தில் திராவிடா் கழக பொதுக்கூட்டம்

வெம்பாக்கத்தில், திராவிடா் கழகம் சாா்பில் திராவிடா் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 10 ஜூன் 2026, 12:04 am IST
வெம்பாக்கத்தில் நடைபெற்ற திராவிடா் எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய தலைமைக் கழக பேச்சாளா் தி. என்னாரெசு பிராட்லா.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில், திராவிடா் கழகம் சாா்பில் திராவிடா் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

திராவிடா் எழுச்சி நாள் மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாள் விழா என பேருத்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பகுத்தறிவாளா் அணித் தலைவா் வி.வெங்கட்ராமன் தலைமை வகித்தாா்.

செய்யாறு மாவட்டத் தலைவா் அ. இளங்கோவன், நகரத் தலைவா் தி.காமராசன், மாவட்டச் செயலா் பொன்.சுந்தா், மாவட்ட துணைத் தலைவா் அ. நாகராசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் எம்எல்ஏ ஒ.ஜோதி, திமுக தலைமைக் கழக பேச்சாளா் நாத்திகம் நாகராசன், திராவிடா் கழகம் தலைமைக் கழக பேச்சாளா் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜேசிகே.சீனுவாசன், பகுத்தறிவாளா் கழகம் ஆரணி இரா.வாசுதேவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.