திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், சார் ஆட்சியர் கார்த்திகேயன் பங்கேற்று, விவசாயிகளிடம் குறைகள், தேவைகளைக் கேட்டறிந்தார்.
இதில், வாணியம்பாடி வட்டம், மரிமானிகுப்பம் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளதால், வனத் துறை சார்பில் கூண்டு வைத்து அவற்றைப் பிடிக்க ஏற்பாடு செய்வது, அலசந்தாபுரத்தில் குடிநீர் பிரச்னையை தீர்ப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.