வேலூரில் இந்து கோயில் மீட்பு மாநாடு ஜூன் 25-ஆம் தேதி நடத்துவது என இந்து முன்னணி செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வேலூர் கோட்ட இந்து முன்னணி அமைப்பின் செயல்வீரர்கள் கூட்டம் சத்துவாச்சாரியில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கோட்டத் தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். பொருளாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
இதில், மறைந்த வெள்ளையப்பனின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வேலூர் மண்டி வீதியில் ஜூன் 25-ஆம் தேதி இந்து கோயில் மீட்பு மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.