வேலூர்

‌கொ‌ள்​‌ளை​ய​டி‌க்க ‌செ‌ன்ற இட‌த்​தி‌ல் ஏமா‌ற்​ற‌ம்:​ முதி​ய​வ‌ர்​க​‌ளை‌த் தா‌க்​கிய ம‌ர்ம நப‌ர்

ஜோலார்பேட்டையை அடுத்த அண்ணான்டபட்டி கத்தியார் வட்டத்தைச் சேர்ந்தவர்  ராமநாதன் (65). தொழிலாளி. இவரது, மனைவி ருக்மணி(52). இவர்கள்

DIN

ஜோலார்பேட்டையை அடுத்த அண்ணான்டபட்டி கத்தியார் வட்டத்தைச் சேர்ந்தவர்  ராமநாதன் (65). தொழிலாளி. இவரது, மனைவி ருக்மணி(52). இவர்கள் இருவரும் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அதிகாலை 3 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து கொண்டு ராமநாதன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சுமார் ஒரு மணிநேரம் வீடு முழுவதும் தேடியும் நகைகள் உள்ளிட்ட எவ்வித பொருள்களும் கிடைக்காததால், ஏமாற்றமடைந்த அந்த மர்ம நபர் ஆத்திரமடைந்து, உருட்டுக் கட்டையால் தூங்கி கொண்டிருந்த முதியவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
அவர்களின் சப்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வருவதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
 காயமடைந்த இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸார்   விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT