நாட்டின் வளர்ச்சியில் மாணவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என ராஜஸ்தான் மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கிரண் மகேஸ்வரி தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மூன்று ஆண்டு சாதனை விளக்கக் கருத்தரங்கம் திருப்பத்தூரில் புதன்கிழமை
நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு நகரத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ராஜஸ்தான் மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கிரண் மகேஸ்வரி கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடியின் மூன்றாண்டு ஆட்சி மிக சிறப்பானதாக தொடர்கிறது. அனைவருக்கும் வீடு, ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் எரிவாயு மானியம், விபத்து காப்பீடு, விவசாயக் கடன் போன்ற திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.
நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு மாணவர்களுக்கு உண்டு. தூய்மை இந்தியா திட்டத்தில் மாணவர்கள் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களது வீடு மற்றும் தெருவை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
இதையடுத்து, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள தெருக்களின் குப்பையை அமைச்சர் கிரண் மகேஸ்வரி சுத்தம் செய்தார். பின்னர், பாவடி பகுதியில் உள்ள நூறு குடும்பங்களுக்கு இலவசமாக பிளாஸ்டிக் பக்கெட்டுகளை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.